Local

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம்!

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வீதிகளில் யாசகம் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading