Local

வெளிநாடுகளில் இருந்து வருவோர் கைப்பேசிகளை
கொண்டுவர தடை?

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருகின்றவர்கள் மேலதிக கைப்பேசிகளை பதிவு செய்யாமல் கொண்டுவருவதற்கு தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பேசி இறக்குமதியாளர்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை அமைச்சர் மனுச நாணயக்கார இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்கள் மேலதிக கைப்பேசிகளை கொண்டுவருவதன் காரணமாக பாரிய வரி வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போவதாக கைப்பேசி இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கைப்பேசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் ஊடாக பாரிய அளவில் கைப்பேசிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அதனால் 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்கள் இலங்கை வரும் போது அவர்கள் மேலதிகமாக விற்பனை நோக்கில் கைப்பேசிகளை கொண்டுவருவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading