Uncategorized

10 ஆம் வகுப்பு மாணவர்களால் 6 ஆம் வகுப்பு மாணவன் துஷ்பிரயோகம்!

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களும் அதே பாடசாலையில் பத்தாம் வருட மாணவர்கள் எனவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர் அதே பாடசாலையின் 6ஆம் வருட மாணவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இந்த மாணவனை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading