Local

17 வயது மாணவனைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனைசெய்த நால்வர் மடக்கிப்பிடிப்பு!

பாடசாலை மாணவர் ஒருவரைப் பயன்படுத்தி அவர் ஊடாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவரொருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார் என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றுமுன்தினம் 17 வயதுடைய இளைஞர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, பாடசாலை சீருடையில் கஞ்சா விற்பனை செய்தால் பொலிஸார் சந்தேகப்படமாட்டார்கள் என்பதே சட்டவிரோத போதை விற்பனைக் கும்பலின் திட்டமாக இருந்துள்ளது. இதையடுத்தே ஆசைகாட்டி குறித்த மாணவன் கஞ்சா வியாபாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் பெயரைப் பொலிஸார் வெளியிடவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading