Local

‘20’ குறித்த உயர்நீதிமன்றின் நிலைப்பாடு சபாநாயகருக்கு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக்கோரும் – அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்தான தனது சட்டவியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.


20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை நான்கு நாட்களாக விசாரணை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இன்று மேற்படி தகவலை வெளியிட்டது.

ஜே.வி.பியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தை மக்கள் கருத்தறியும் வாக்குமூலம் மூலம் நிறைவேற்ற வேண்டுமென பொருட்கோடல் வழங்குமாறு கோரி உதய கம்மன்பில மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை நான்கு நாட்களாக உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading