243 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது.. 103 பயணிகள் மீட்ப்பு – 140 பேரை காணவில்லை.!
சீரற்ற வானிலை காரணமாக 243 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது.. 103 பயணிகள் மீட்ப்பு – 140 பேரை காணவில்லை.!
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன “Virgo Transport 8” என்ற பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 103 பயணிகளை மீட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உ**யி**ரிழந்துள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலில் விபத்து நேர்ந்தபோது 243 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image generated by AI
#java #indonesia #missing #NewsUpdate

You must be logged in to post a comment.