Uncategorized

29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுக்கூர். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. சில மலையாள படங்களில் நடித்துள்ள சுக்கூர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஷீனா எனபவர்க்கும் கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இஸ்லாமிய முறைப்படி (ஷரியத் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில்) இவர்களது திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜோசா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

29 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் திருமணம்

சுக்கூர் – ஷீனா தம்பதி ஷரியத் விதிமுறைப்படி திருமண செய்துகொண்டதால் அவர்களது சொத்தில் மூன்றில் 2 பங்கு மட்டுமே அவர்களது மகள்களுக்கு கொடுக்கப்படும். மீதி ஒரு பங்கு சுக்கூரின் சகோதர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

இருப்பினும் தனது சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய மகள்களுக்கு கொடுக்க நினைத்திருக்கிறார் அவர். இதனால் தனது மனைவியை சிறப்பு திருமண சட்டத்ததின் படி மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார்.

இதனையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்ததின் படி தனது மனைவி ஷீனாவை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார் சுக்கூர். சர்வதேச மகளிர் தினமான நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஹோஸ்துர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது மூன்று மகள்களின் முன்னிலையில் சுக்கூர் – ஷீனா தம்பதி மீண்டும் திருமணம் செய்திருக்கின்றனர். அதன்பிறகு அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள் இந்த தம்பதியர்.

இந்த சூழ்நிலையில் தங்களது திருமண புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுக்கூர் தந்து வாழ்நாள் சேமிப்பு முழுவதும் தனது மகள்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

திருமணமாகி 29 வருடங்கள் கழித்து தங்களது மகள்களுக்காக சுக்கூர் – ஷீனா தம்பதி மீண்டும் திருமணம் செய்துகொண்டது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading