Local

இலங்கையில் ‘உச்சகட்ட’ பாதுகாப்பை கோருகிறது சீனா!

இலங்கையிலுள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா கோரியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை அடங்கிய குறிப்பு,  இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளது என்றும் எனவே, இலங்கையில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பு  தேவைப்படுவதாகவும், சீனா அந்த குறிப்பில் வலியுறுத்தியுள்ளது.

சீனா முக்கியமான, நட்பு பங்காளர் என்றும், அது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும், குறிப்பிட்டுள்ள   இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனர்களினதும், சீன நிறுவனங்களினதும் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவுக்கு உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading