Local

50 விகாரைகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம்! – ஞானசார தேரர் எச்சரிக்கை

“இலங்கையில் 50 விகாரைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, வெசாக் மற்றும் பொசன் தினங்களில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.”

– இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தெரிவித்தார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரர், வழக்கு விசாரணையொன்றுக்காக இன்று ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து, இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தேரர்,

“வெசாக், பொசன் முடியும்வரை எந்தவொரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். 50 விகாரைகள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் உள்ளன. சிறைச்சாலைக்கு வாருங்கள் தருகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading