Local

நோர்வூட்டில் 15 அடி தாழிறக்கம் – 3 ஆவது நாளாகவும் போக்குவரத்து பாதிப்பு! ( படங்கள் இணைப்பு)

நோர்வூட் – நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள நிலம் தாழிறக்கத்தால் அட்டன் – பொகவந்தலா பிரதானவீதி மூன்றாவது நாளாகவும் (15) மூடப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.


மேற்படி வீதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அது 15 வரையில் தாழிறங்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது. மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அட்டனிலிருந்து நிவ்வெளிகம பகுதிவரையிலும், நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா , பொகவந்தலா, சாமிமலை பகுதிகளுக்கான பயணிகள் போக்குவரத்தை அரச மற்றும் தனியார் துறையினர் முன்னெடுத்து வருவகின்றனர்.

மேற்படி வீதி மூடப்பட்டுள்ளதால் – அட்டனிலிருந்து காசல்ரி வழியாக மஸ்கெலியா பதையையும், நோட்டன் வழியாக மஸ்கெலியா வழியையும், டிக்கோயா புலியாவத்தை வழியாக பொகவந்தலா பகுதிக்கான போகுவரத்திற்கு பயன்டுத்துமாறு பொலிஸார் வாகனசாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மு.இராமச்சந்திரன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading