LocalUp Country

கடும் பனிப்பொழிவால் கருகும் கொழுந்து ! தொழிலாளர்கள் திண்டாட்டம்!!

மலையகத்தில் நிழவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை தோட்டங்களில்,  கொழுந்து கருகிவருவதுடன்,   தோட்டத் தொழிலாளர்களும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் பிரதேசத்தில், கடந்த வாரம் பொழிந்த பனியினால் – பெல்மோரல் தோட்டத்தில் மாத்திரம் 15 ஏக்கர் தேயிலை செடிகள் கருகியுள்ளன என்று  தோட்ட தொழிலாளர்கள் கவலை வெளியிட்டனர்.

இத் தோட்டத்தில் 80 ஏக்கரில்  தேயிலை பயிரிடப்பட்டிருக்கின்ற  போதிலும் இதில் 15 ஏக்கர் பனியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 ஏக்கர் தேயிலை மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்றி இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தோட்ட நிர்வாகத்தினால், தினமும் பறிக்கக் கூறும் 18 கிலோகிராம் தேயிலையைப் பறிக்கமுடியவில்லை எனவும், தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள உயர்வு விவகாரமும், தற்போது பிரச்சினையாகவே இருக்கின்ற பொழுதிலும் குடும்ப பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், குடும்ப செலவினை சமாளிக்க முடியாத சூழ் நிலையில் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் அதிகரிக்கும் வரை தமக்கு தோட்ட நிர்வாகம் நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென இத்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading