Local

தயாராகிறது தூக்குமேடை! அலுகோசு பதவிக்காக 21 இல் நேர்முகத் தேர்வு!!

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலுகோசு பதவிக்காக அமெரிக்கப் பிரஜை ஒருவர் உட்பட 102 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிலிருந்து 79 பேரே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் மாத்திரமே தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading