Sports

IPL போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி!

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்  அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading