World

விடைபெறுகிறார் ஜப்பான் பேரரசர்

ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito), இன்றுடன் (30ஆம் திகதி) ஓய்வு பெறுகின்றார். இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார்.

85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.

முதுமை காரணமாக தன்னுடைய கடமைகளை சரிவர கொண்டுசெல்ல முடியாதுபோகும் என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ, 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அவரது விருப்பப்படி, இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அரசரின் மீது பரிவை உண்டாக்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றாலும், தேசத்தின் அடையாளமாக அவர் இருப்பார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading