Jobs

KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை

 

இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் (Periodic Institutional Review),  அனைத்து அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மத்தியிலும் KIU பல்கலைக்கழகம் அதிகூடிய ஒட்டுமொத்த புள்ளிகள் சதவீதத்தை (85.86%) பதிவு செய்துள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த காலமுறை நிறுவன மீளாய்வு என்பது இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு காணப்படும் மிகவும் விரிவான செயல்முறைகளில் ஒன்றாகும். நிர்வாகம், முகாமைத்துவம், நிதி நிலைத்தன்மை, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வித் திட்டமிடல், தர உறுதிப்பாடு மற்றும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான பணியாளர் பலம் ஆகிய ஆறு முக்கியப் பிரிவுகளின் கீழ் இதன் போது பல்கலைக்கழகங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த கட்டமைப்பில் KIU பல்கலைக்கழகம் அனைத்துப் பிரிவுகளிலும் தேசிய தரநிலைகளை விஞ்சி, வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த உயர் மதிப்பீடு காலமுறை நிறுவன மீளாய்வில் மட்டுமின்றி,  பாடநெறி மட்டத்திலும் பிரதிபலிக்கிறது. BSc Hons in Bio Medical Sciences பட்டப்படிப்பு பாடநெறி 93.7% சித்தி விகிதத்துடன் நாட்டின் மிக உயர்ந்த தரவரிசைப் பாடநெறிகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில்  BSc Hons in Psychology பட்டப்படிப்பு பாடநெறி  83.78% சித்தி விகிதத்துடன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது KIU பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் மேலும் வலுவடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. கணக்கியல், சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட பிற துறைகளிலும், KIU பல்கலைக்கழகம் எதிர்பார்க்கப்படும் தரநிலைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதன் மூலம் ஒரு வலுவான மற்றும் சமச்சீரான கல்வி முறையை நிறுவியுள்ளது.

மாணவர்களும் பெற்றோர்களும் இதை ஒரு உண்மையான உத்தரவாதமாக எடுத்துக்கொள்ளலாம். KIU பல்கலைக்கழகம் உயர் கல்வி அமைச்சின் (MOHE) அனுமதியுடன் கூடிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். மேலும், இலங்கைத் தகுதிக் கட்டமைப்புடன் (SLQF) இணங்கியதான, சர்வதேசத் தரத்திலான கல்வியை வழங்குவதற்கு இது தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. KIU-வின் பல மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்காக முழுப் புலமைப்பரில்களையும் பெற்றுள்ளனர். மேலும், இப்பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் பல்வேறு தொழில்கள் மற்றும் கல்வித் துறைகளில் உயர் வேலைவாய்ப்புத் திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த முடிவுகள், கல்வியானது வகுப்பறைக்கு அப்பாற்பட்டு, உலகளாவிய வாய்ப்புகளுக்கும் நீண்டகால தொழில் சாதனைகளுக்கும் வழிவகுக்கும் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றன. அமைச்சினால் வழிநடத்தப்படும் இந்த மீளாய்வுச் செயல்முறை, அரசு சாரா பல்கலைக்கழகங்கள் தேசிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதை உறுதி செய்கிறது. மேலும், தனியார் நிறுவனங்கள் அந்தத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவற்றை விஞ்சவும் முடியும் என்பதை KIU-வின் முடிவுகள் நிரூபித்துள்ளன. இது வெறும் புள்ளிகளை பொறுத்த விஷயம் மட்டுமல்ல, தெளிவான தொலைநோக்குப் பார்வை, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தரம் ஆகியவை ஒன்றிணையும்போது, ​​குறுகிய காலத்தில் சாதனைகளை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு வலுவான சான்றாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading