Local

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை! பால்மா இற்குமதி வரியும் உயர்வு!!

எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,  கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு, நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது.


இதன் பிரகாரம்,  ஒரு கிலோ சம்பா அரிசி 108 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டரிசி 88 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும். எந்தத் தினத்திலிருந்து கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவது என்பது பற்றி,  விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியையும் 15 ரூபாவால் அதிகரிப்பதென வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும். இதன் மூலம் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும்,  வாழ்க்கைச் செலவுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading