Local

முன்னாள் தளபதிகளுடன் மஹிந்த முக்கிய பேச்சு! – கோட்டாவும் பங்கேற்பு

தனது ஆட்சியின்போது பாதுகாப்புத் துறையில் உயர் பதவிகளை வகித்தவர்களை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் கடற்படைத் தளபதி, முன்னாள் விமானப்படைத் தளபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading