Local

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்தவே தீர்மானிப்பார்! – மைத்திரியின் கழுத்தை இறுக்குகிறது தாமரை மொட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று  சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜெயசேகர கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ்,

”அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார், அந்த உரிமையை யாருக்கும் விட்டுத் தர முடியாது.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணி, 70 வீதமான வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. எமது தாமரை மொட்டு சின்னமே, அந்த வெற்றியை பிரதிநிதித்துவம் செய்கிறது.

இந்த சின்னத்தையோ, அடையாளத்தையோ எந்தவொரு கூட்டணிக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading