Local

பரபரப்புக்கு மத்தியில் டுபாய் பறக்கிறார் நாமல் எம்.பி.!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  அம்பாந்தோட்டை மாவட்ட  எம்.பியான நாமல் ராஜபக்ச, நாளை மறுதினம் டுபாய் செல்கின்றார்.

அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு பயணமாகின்றார் என்றும், டுபாய் வாழ் இலங்கையர்களாலேயே  குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

அதேவேளை, அந்நாட்டிலுள்ள அரசியல் பிரமுகர்களையும் நாமல் எம்.பி.  சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதாள கோஷ்டி தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட போதைப்பொருள் கடத்தல் கும்பல் டுபாயில் கைதாகியுள்ள நிலையில், அது குறித்து இலங்கை அரசியலிலும் பலகோணங்களில் கதைகள் அடிபடுகின்றன.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading