Local

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இதற்கான நியமனக் கடிதத்தை இன்று அவர் பெற்றுக்கொண்டார்.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இராஜதந்திர சேவையில் இணைந்துகொண்ட கோட்டேகொட, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவராக  செயற்பட்டு வந்தார்.

பாதுகாப்பு செயலர் பதவிக்கு சிவில் பிரதிநிதியொருவரே நியமிக்கப்பட வேண்டும் என கடந்தகாலங்களில் வலியுறுத்தப்பட்டது. எனினும், அப்பதவிக்கு இராணுவத்தின் முன்னாள் தளபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading