OnIine இல் ரயில் சீசன் டிக்கெட் அக்டோபர் 1 முதல் அமுல்
இலங்கை ரயில்வேயில் தனியார் துறை ஊழியர்களும் சிரமமின்றி இணைய வழியில் (OnIine) மாதாந்த ரயில் சீசன் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது தனியார் துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே seatreservation.railway.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் மாதாந்த சீசன் டிக்கெட்டுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சு, இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் மொபிட்டல் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை ரயில்வேயை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.