Local

600 முஸ்லிம்களை நாடு கடத்துமாறு பிரதமர் உத்தரவு

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா நுழைவிசைவு மூலம்,  இலங்கை வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும்  அரபுமொழியை கற்பித்து வருகின்றனர்.

இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன்,  இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களை,  வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அத்துடன், இவர்கள் எப்படி நுழைவிசைவு பெற்றனர், அவர்களுக்கான இருப்பிட வசதிகளை செய்து கொடுத்தது யார் என்பன போன்ற விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading