Up Country

பதுளையில் தேடுதல் – இராணுவ சீருடைகளுடன் சுலைமான் கைது

பதுளை லுணுகலைப் பகுதியில் (30-04-2019) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பட்டவத்தை எனும் இடத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையிலான இராணுவசீருடைப் புடவைகள் மற்றும் 18 கடவுச் சீட்டுப் புத்தகங்கள் (பாஸ்போட்கள்) ஏழு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவற்றை இராணுவத்தினர் கைப்பறியுள்ளனர்.

அத்துடன், மேற்படி பொருட்களைமீட்ட இராணுவத்தினர், வீட்டுரிமையாளரான சுலைமான் சிபாரக் ஹலி என்ற 41 வயதுடைய நபரையும் கைதுசெய்துள்ளனர்.


மேலும், இராணுவத்தினர் தாம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும், கைது செய்யப்பட்டவரையும் லுணுகலைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பட்டவத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ளவீட்டைசோதனையிடுகையிலேயே,மேற்கண்டபொருட்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்டபொருட்களுடன், கைதுசெய்யப்பட்ட நபரையும், இராணுவத்தினர் லுணுகலைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைதுசெய்யப்பட்டநபர், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,பொலிசார் தெரிவித்தனர்.

மடுல்சீமைமற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில், இராணுவத்தினர் தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இராணுவத்தின் இந்நடவடிக்கைகளுக்குபொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதை, அவதானிக்க கூடியதாக இருந்தது.

பதுளை நிருபர் – எம். செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading