LocalNorth

வடக்கிலும் தேடுதல் வேட்டை! – யாழில் மூவர் கைது!

வடக்கிலும் பல இடங்களில் இன்று தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும், படையினரும் ஈடுபட்டனர்.

இதன்படி யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் இன்று (27) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி – இயக்கச்சிப் பகுதியிலும் இன்று காலை படையினர் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்ற காணிகள் என்பன படையினரால் சோதனையிடப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading