Local

கொழும்பு பேராயர் இல்லத்தில் விசேட தேவ ஆராதனை! – மைத்திரி, ரணில், மஹிந்தவும் பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த அனைவரினதும் ஆத்மசாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் முழுமையாகக் குணமடைவதற்காகவும் கொழும்பு பேராயர் இல்லத்திலும், விசேட தேவ ஆராதனை இன்று காலை நடைபெற்றது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆராதனையை நடத்தினார்.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொழும்பு பேராயரால் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பேராயர் உரையாற்றும்போது, “இந்தத் தாக்குதல்கள் மனித செயற்பாடுகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று தெரிவித்தார்.

“கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது முழுமையாக மதத்துக்கு மாறுபட்ட ஒன்றாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading