Local

நாளை கொழும்புவரும் பிரிட்டன் அமைச்சர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு!

இலங்கைக்கு நாளை (05) பயணம் மேற்கொள்ளவுள்ள பிரிட்டன் இராஜாங்க அமைச்சர் மார்க் ப்லிட், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியப் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகசெயற்பாட்டாளர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

போருக்கு பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சி உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கேட்டறியவுள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சனிக்கிழமைவரை நாட்டில் தங்கியிருப்பார் என்றும், வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading