Local

ஐ.நாவுடன் முரண்படமுடியாது! ஜெனிவா தீர்மானத்தை ஏற்றாக வேண்டும்!!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் முரண்படாமல், ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே செயற்பட வேண்டும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) ஜெனிவாக் கூட்டத்தொடர் தொடர்பில் தினேஷ் குணவர்ன எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மஹிந்த ஆட்சியின்போது, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அனைத்துலக சமூகம் தயாராகி வந்தது. எனவே, இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் சர்வதேச தடை அமுலுக்கு வந்திருக்கும்.

எமது ஆட்சியின்கீழ்தான் சர்வதேசப் பிடிக்குள் இருந்து நாட்டை மீட்டெடுத்து, மின்சாரக் கதிரை அச்சுறுத்தலிலிருந்து மஹிந்தவையும் காப்பாற்றினோம். எனவே, சர்வதேசத்துடன் முரண்படமுடியாது.” என்றும் கிரியல்ல கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading