Sports

தலவாக்கலையில் மாபெரும் கரப்பந்தாட்டத் தொடர்!

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் ஜனன தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர் இம்மாதம் 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்குகொள்ள விரும்பும் அணிகள், காலம் தாழ்த்தாது (076-2425124) எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தமது அணி தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இக் கரப்பந்தாட்ட போட்டித் தொடரின் முடிவில் (17.04.2019) அன்று தமிழர் பாரம்பரிய புதுவருட பெருவிழாவும் நடைபெறவுள்ளது.

அதில், கிராமிய இசைவடிவங்களான பறை, தப்பு, உருமி இசைக்கப்படுவதுடன், பாரம்பரிய நடனங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading