Local

அரசமைப்பின் 19ஐ மேலும் திருத்த ஐ.தே.க. எதிர்ப்பு!

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் திருத்தத்துக்கு உள்ளாக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், பிரஜைகளின் உரிமைகளுக்காகத் தாம் எப்போதும் போராடத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில், கொழும்பில் இன்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, ஜனநாயகத்தைச் சீர்குர​ழைப்பதற்காக அணிதிரண்டுள்ள துஷ்ட சக்திகள், 19ஆவது திருத்தச் சட்டத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனரெனக் குற்றஞ்சாட்டினார்.

பிரஜைகளை பலவீனப்படுத்தி, அரசியல்வாதிகள் பலமாகிக்கொள்வதற்கு எதிராக, எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடத் தாம் தயாராக உள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading