Lead NewsLocal

ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா – சபாநாயகருடன் அந்நாட்டுத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதன் முக்கியத்துவம் குறித்து சபாநாயகருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதரகத்தின் கீச்சகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஜனநாயக நிறுவனங்கள் இலங்கை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். தெரிவு செய்யப்பட்ட பிரதிநி்திகளை சொல்ல விடுங்கள்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading