Local

‘பல்டி’யடித்தவர்களில் மேலும் எட்டுபேர் ஐ.தே.க. பக்கம் – ரஞ்சித் மத்தும பண்டார தகவல்!

மஹிந்த ராஜபக்ச பக்கம் தாவிய மேலும் எட்டுபேர் ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணையவுள்ளனர் என்று ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ அழுத்தம் காரணமாகவே எமது பக்கமிருந்த உறுப்பினர்கள் சிலர், மஹிந்த – மைத்திரி பக்கம்சென்று, பதவியேற்றுள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும்போது எமது பக்கம் மீண்டும் வருவதற்கு 8 பேர் தயாராகவே உள்ளனர். ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணியே கைப்பற்றும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை” எ ன்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading