Local

ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாக். பிரஜை கைது!

தெற்காசியாவில் இலங்கையானது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்தி ரநிலையமாக மாறியுள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினமும் ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கராச்சி விமானநிலையத்திலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையம் வந்த மேற்படி நபரிடமிருந்து ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளளது.

பயணப்பைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைத்தே ஹெரோயினை கடந்தியுள்ளார் என்றும், விசாரணைகளின்போதே வசமாக சிக்கிக்கொண்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதாகியுள்ள 35 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் பிரஜை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading