Local

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கூறும் விக்னேஸ்வரனுக்குப் பதிலளிக்க முடியாது! – சம்பந்தன் காட்டம்

“ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கருத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து வருகின்றார். அவரின் கருத்துக்குப் பதிலளிக்க முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வியாழக்கிழமை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் ஒவ்வொரு நாளும ஒவ்வொன்றைக் கூறி வருகின்றார். நீங்கள் கேட்கும் அவரின் கருத்துக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிட்டார் இரா.சம்பந்தன்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading