Local

காருக்குள் கஞ்சா! ஐந்து பேர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசுக் காரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2கிலோ 50கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.

இந்தக் காரில் பயணித்த சோமசுந்தரம் பிரதீப் (வயது 31, பரந்தன்), சோதசுந்தரம் பிரதீபன் (வயது 29, பரந்தன்), திருவழகன் சதீஸ்குமார் (வயது 18, பரந்தன்), ரவீந்திரன் சதீஸ் (வயது 34, நிலாவெளி) தேனபந்கே அமரகீர்தி கிஷாந்த (வயது 44, திருகோணமலை) ஆகியோர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓமந்தைப் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading