Local

கொழும்பின் பாதுகாப்புக்கு கொமாண்டோ படை!

நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்தின் கொமாண்டோ பிரிகேட்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றம், ஜனாதிபதி வாசஸ்தளம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே இராணுவத் தளபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் ‘நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி’யின் ஒரு கட்டம் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்டது.

இதன்போது, கொமாண்டோக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போதே இராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading