Local

கொழும்பில் இனி இரவில் யன்னல்களை திறந்து வைத்து தூங்காதீர்!

கடும் வெப்பம் காரணமாக, வீடுகளின் யன்னல்களை இரவு நேரங்களில் திறந்து வைப்போர், திருடர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடனும் நடந்துகொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பிரதான நகரப் பகுதிகளில், வீடுகளின் யன்னல்கள் இரவு நேரங்களில் திறக்கப்பட்ட நிலையில் பணம் மற்றும்  பெறுமதியான நகைகள் என்பன,  அண்மையில் வீடுகளிலிருந்து திருடர்களினால் களவாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
தற்போதைய கால நிலையை, திருடர்கள் வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமது கைவரிசைகளை இவ்வாறு காட்டி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், தனியாக வீடுகளில் இருப்போர், மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் தனது துணைக்கு யாரையாவது வைத்துக்கொள்வது சிறந்ததெனவும், பொலிஸார் பொதுமக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading