Local

கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கு 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் சாட்சிகள் மூவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியுள்ளது.

சாட்சியாளர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணப் பணிக்காக 33 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading