Local

சொந்த அண்ணனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தம்பி!

ஊருபொக்க, ஹீகொட பகுதியில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட காணிப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

75 வயதுடைய மூத்த சகோதரனே இவ்வாறு தம்பியின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊருபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading