Technology

ஜனவரி 20 இல் வானில் அதிசயம் – சிவப்பு நிலாவை பார்க்க மறக்காதீர்!

ஜனவரி 20ஆம் திகதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ என அழைத்து வருகின்றனர்.

இந்த ‘வுல்ஃப் மூன்’ வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ஆம் திகதிகளில்; நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு,

பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ப்ளட் மூன்’ என ஆய்வாளர்கள் கூறுகிறார்.

இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது.

ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் வானில் நிகழும் முதல் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading