Local

தகவல் அறியும் உரிமை வாரம் வெள்ளியன்று ஆரம்பம்!

தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் எதிர்வரும் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, தகவல் வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. தகவல் வாரம், நாளைமறுதினம் 21ஆம் திகதி  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகளைப் பயன்படுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு இதன் ஊடாக  தெளிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

‘கிராமத்துக்குத் தகவல் உரிமை’ என்ற தலைப்பில், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான  சட்டம் குறித்த நடமாடும் சேவைகளும் இந்த வார காலத்திற்குள்  நடைபெறும் எனவும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் அறியும் உரிமை தொடர்பாகத்  தெளிவுபடுத்துவதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading