Local

தீர்ப்பை காலதாமதமின்றி துரிதமாக வெளியிடுங்கள்! – பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை

நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை காலதாமதமின்றி  துரிதமாக வெளியிடுமாறு சட்டமா அதிபர் ஊடாக – உயர்நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளார்.

குறித்த கோரிக்கை நாளை முன்வைக்கப்படவுள்ளது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு இன்னும் ஏழு நாட்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 4 ஆம் திகதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading