Local

தாமரை மொட்டில் தேர்தலில் குதிக்கின்றார் நாமல் குமார!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகைச் சேர்ந்தவரையும், பொலிஸ் அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார, பின்னர் சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த படுகொலைச் சதியில் தொடர்பு இருக்கின்றது என நாமல் குமார தெரிவித்திருந்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மூலகாரணியாக இருந்த நாமல் குமார, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருப்பது, இந்தப் படுகொலைச் சதித் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading