Local

நீதிமன்ற வளாகத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் கொண்டாட்டம் – ஏமாற்றத்துடன் திரும்பியது மஹிந்த அணி!

உயர்நீதிமன்றத்துக்கு இன்று வருகைதந்திருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பிக்கள், தீர்ப்பு வெளியானகையோடு நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் – பட்டாசு கொளுத்தி, ஜனநாயகம் வென்றுவிட்டதாக கோஷம் எழுப்பினர்.

அஜித்பி பெரேரா, ராஜித சேனாரத்ன, முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் ஆதரவாளர்களுக்கு மத்தியில்வந்து வெற்றிக்கோஷம் எழுப்பினர். அதேபோல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேவேளை, நீதிமன்றம் வந்திருந்த மஹிந்த அணியினர் ஏமாற்றத்துடன் வெளியேறுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து – நாடு முழுவதும் ஐ.தே.க. ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading