Local

பன்றி இறைச்சி விற்பனைக்கு அனுமதி! – வருகின்றது அமைச்சரவைப் பத்திரம்

பன்றிகளை வேட்டையாடுவதற்கும், விற்பனைக்கு செய்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் பயிர்ச்செய்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இது தொடர்பில் பல விவசாயிகள், விவசாய அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தற்போது காணப்படும் சட்டத்திற்கமைய காட்டுப் பகுதிகளில் பன்றிகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் செல்லும் பன்றிகளை கொல்வதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை.

இவ்வாறு கொல்லப்படும் பன்றிகளை இறைச்சிக்கு விற்பதற்கு இனிவரும் நாட்களில் அனுமதி வழங்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading