Local

மனுஷ நாணயக்கார மீண்டும் ரணிலுடன் சங்கமம்! கடும் சீற்றத்தில் மைத்திரி – மஹிந்த கூட்டணி!!

மைத்திரி – மஹிந்த தலையிலான புதிய அரசில் கடந்த வாரம் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.

ஐ.தே.கவில் இருந்து தாவி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக  பொறுப்பேற்றிருந்த மனுஷ நாணயக்கார  தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று காலை அனுப்பிவைத்துள்ளார்.

அத்துடன், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவின் இந்த அதிரடி நடவடிக்கையால் மைத்திரி – மஹிந்த கூட்டணி கடும் சீற்றத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading