World

`முக்கிய வங்கிகள் ஹேக்; தகவல் திருட்டு!- பாகிஸ்தானை பதறவைத்த ஹேக்கர்ஸ்

பாகிஸ்தானில் உள்ள மிக முக்கிய வங்கிகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான முக்கிய வங்கிகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருந்த பொதுமக்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும் நேற்று பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வங்கித் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் புகார்களும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும் புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த தகவலின்படி திருட்டு நடைபெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு வங்கிகளின் டெபிட் கார்டுகள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு பின்பு அது வங்கியின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் நகல்கள் சர்வதேச கள்ள இணையச் சந்தையில் வெளியிடப்பட்டதாக மாஸ்கோவைச் சேர்ந்த சர்வதேச சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading