ராகமவில் இருவரைப் பலியெடுத்த ரயில்! – மேலும் இருவர் உயிருக்குப் போராட்டம்
ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் படுகாயங்களுடன் ராகம வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 07.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த நால்வரும் ரயில் பாதையைக் குறுக்காகக் கடந்த சென்றுபோதே ரயிலுடன் மோதியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
