Local

ராஜிதவுக்கு எதிராகவும் மைத்திரி போர் தொடுப்பு! சுகாதார அமைச்சு பணியகத்துக்கு ‘சீல்’!!

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் இருந்து சில ஆவணங்களை  அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அகற்ற முயற்சிப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதி ஒருவரின் எடுபிடிகளோ சுகாதார அமைச்சின் ஆவணங்களை அகற்ற முயன்றதாக, அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவத் துறை நியமனங்கள் மற்றும் மருந்துகள் கொள்வனவு தொடர்பான, சில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலரால் அகற்றப்பட்டிருக்கக் கூடும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தற்போதைய நகர்வுகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரைக் குறிவைத்தே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading