World

ரூ. 500 இற்காக திருமணம் முடித்த 30 பெண்கள் கைது!

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும் அவரக்ளை திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறூ பணிகளுக்காக சென்ற ஒருசிலர் விசா முடிந்தவுடன் அதிக நாட்கள் தங்குவதற்கு தாய்லாந்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்வதாக போலி சான்றிதழ் கொடுத்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி திருமணத்திற்காக இந்தியர்கள் தாய்லாந்து பெண்களுக்கு 500 முதல் 5000 ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பணம் பெற்று போலி திருமணம் செய்த 30 பெண்களும், அவர்களை திருமணம் செய்த 30 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் இன்னும் பல இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் அவர்களை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading