World

வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை !

மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை சிறுத்தை கடித்துக்கொன்றது.
மராட்டிய மாநிலம் ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 வயது புத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து  தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரமான  அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்துக்கொன்றது.
 இவருடன் தியானம் செய்த சிஷ்யர்கள் இருவர் தப்பியோடி இந்த  தகவலை காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், புத்தமதத்துறவியின் உடலை தேடினர். ஆனால், நிகழ்விடத்தில்  ராகுல் வாக்கி போதியின் உடல் இல்லை, சிறுத்தை அவரை கடித்துக் குதறி காட்டுக்குள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ராகுல் வாக்கி போதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆபத்தான பகுதி என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி புத்தத் துறவிகள் இங்கு காலையில் தியானம் செய்ய வருவதாக புகார்கள் உள்ளன. நடப்பு மாதத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவது இது 5-வது முறையாகும்.  825 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதி மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading